Advertisment

"பெண்கள் நலனுக்காக பாஜகவில் இணைய உள்ளேன்" - தாடி பாலாஜி மனைவி அதிரடி

thadi balaji wife nithya ready to join bjp

தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்பவருடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

Advertisment

நித்யா தனது குழந்தையுடன்சென்னைமாதவரம் பகுதிசாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். அண்மையில் நித்யாவின் எதிர்வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது காரை நித்யா சேதப்படுத்தியுள்ளதாகக் கூறி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்தனர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நித்யா, "தனியாக வாழும் பெண்கள் குறித்து நிறைய கேள்விகள் உலா வருகின்றன. நாங்கள்எல்லாம் நேர்மையான முறையில் சம்பாதிக்க மாட்டோமா?தவறான முறையில் தான் சம்பாதிப்போமா?அதனால் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் நான் பேசுகிறேன். நான் தனிப்பட்ட முறையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்ததால், இனி வரும் பெண்கள் அதைச் சந்திக்கக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் மேம்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

அப்படிஆசைப்பட்டு சாதித்தவர்கள் வரிசையில்தமிழிசை சவுந்தரராஜன்இருக்கிறார். அவர் எனக்கு மிக பெரியஇன்ஸ்பிரேஷன். அதனால் பெண்கள் மேம்பட மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாஜகவில் இணையவுள்ளேன்" என்றார்.

actorbalaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe