style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'குற்றம் 23' திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் நிறுவனம், தற்போது 'தடம்' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">