Skip to main content

தெலுங்கைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக்காகும் ‘தடம்’!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

thadam hindi remake

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண்விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘தடம்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கில் ராம் பொத்தினேனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ரெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இந்த நிலையில், ‘தடம்’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அறிமுக இயக்குநர் வர்தன் கேட்கர் இயக்க, ஆதித்யா ராய் கபூர் நாயகனாக நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண் விஜய் பட வெளியீட்டு உரிமம் பெற்ற லைகா

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

 Arun Vijay film release licensee by Lyca

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர். 

 

சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது. லைகா புரொடக்‌ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம். ராஜசேகர் & எஸ். சுவாதி தயாரிப்பில் நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படம்  இணைந்துள்ளது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய்ச் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

 

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை எமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். 

 

 

Next Story

வதந்திகளை நம்ப வேண்டாம் - அருண் விஜய்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Kindly do not believe any rumors - Arun vijay 

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் எனப் பட்டியல் எடுத்தால் அதில் என்றுமே விஜயகுமாருக்கு முக்கிய இடம் உண்டு. நாட்டாமை கதாபாத்திரம் என்றாலே நமக்கு விஜயகுமார் ஞாபகத்திற்கு வந்துவிடுவார். பல படங்களில் நாயகன், நாயகியின் அப்பாவாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகுமார்.

 

எல்லோரும் தன் மகன்களை மட்டுமே கதாநாயகனாக களம் இறக்குவார்கள். ஆனால், இவரது மகன் மட்டுமல்லாது மகள்கள் அனைவரையுமே சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க வைத்தவர். இப்படியான பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான விஜயகுமார் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

நேற்று திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “அப்பா வீட்டில் நலமுடன் தான் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்