Skip to main content

'என்னை பற்றி விசாரிப்பார் அஜித்...விஜய்க்கு அவரது அப்பா இருந்தார்'- அருண் விஜய்

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

முறை மாப்பிள்ளையாக அறிமுகமாகி பாண்டவர் பூமியில் வாழ்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கான தடத்தை பதித்திருப்பவர் நடிகர் அருண் விஜய். என்னை அறிந்தால், செக்க சிவந்த வானம், குற்றம் 23 ஆகியத் தொடர் வெற்றிப் படங்களில் நடித்த அவர் இரட்டை அவதாரம் எடுத்திருக்கும் படம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தடம். படத்தைப் பற்றியும் அவரின் ஆரம்பகால திரையுலக அனுபவங்கள் குறித்தும் அருண் விஜய் பகிர்ந்துகொண்ட சுவாரசியங்களின் தொகுப்பு.
 

arun vijay


குற்றம் 23, செக்க சிவந்த வானம், அதைத் தொடர்ந்து தடம் வரப்போகிறது. இப்போது பாக்ஸர், அக்னிச் சிறகுகள் போன்ற படங்களில் நடிக்கீறீர்கள். அதற்குப் பிறகு எந்தமாதிரி கதைகளைத் தேர்தெடுக்கலாம்னு திட்டமிட்டிருக்கீங்க?
 

திட்டமிடல் எதுவும் இல்லை. என் படங்களில் எப்பவும் ஆக்‌ஷன் இருக்கணும், அதையும் தாண்டி ஒரு நடிகராக என்னை வெளிப்படுத்தக்கூடிய கதையாக இருக்கணும். மக்களோடு சுலபமாக கனேக்ட் ஆகிற, அதே நேரத்தில் எப்போதும்போல் இல்லாமல் புதிதாக சில விஷயங்கள் இருக்கவேண்டும் என்கிறத் தேடலில்தான் இருக்கேன்.  ‘அக்னிச் சிறகுகள்’படத்தின் கதையும் தமிழ் சினிமாவிற்குப் புதிதாக இருக்கும். விஜய் ஆண்டனி, மூடர் கூடம் படத்தை எடுத்த நவின் ஆகியோருடன் நான் அந்தப் படத்தில் இணைந்திருக்கிறேன். அதேபோல் ‘பாக்ஸர்’ஒரு விளையாட்டை மையமாகக் கொண்டப்படம், விளையாட்டுமட்டுமில்லாமல் அதில் நிறைய எமோஷனல் கனேக்ட் இருக்கும். நான் காத்திருந்து படம் நடிக்குறதெல்லாம் ஒவ்வொரு படத்திலும் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தணும் என்பதற்காகத்தான். இதுவரைக்கும் அது நடந்துகிட்டிருக்கு. இனிமேலும் நடக்கும்னு நம்புறேன்.
 

மகிழ் திருமேனி சார் ஏற்கனவே உங்கக்கூட ஒரு வெற்றிப்படம் கொடுத்திருக்காரு. அவர் இயக்கத்திலேயே இன்னொருப்படம் நடித்தால் வெற்றியடையும் என்ற நோக்கில் தடம் படத்தில் நடிக்கிறீர்களா, அல்லது கதை நல்லாருக்கு என்பதால் அவருடன் தொடர்ந்து படம் பண்றீங்களா?
 

இப்போ வெற்றிதான் நம்மைப் பற்றிப் பேசுது. ஆனால், எல்லோருக்கும் வெவ்வேறான தேர்ந்தெடுக்கிற வழிமுறைகள் இருக்கும். எனக்கென இருக்கும் வழிமுறையில் நான் கதைகளை தேர்ந்தெடுக்கிக்றேன். அந்த கதைப் பார்வையாளரோடு கனேக்ட் ஆகணும். அப்படிக் கனேக்ட் ஆகிட்டாலே வெற்றிதானே. ‘குற்றம் 23’படத்தின்போது, இது ரொம்போ சென்சிடிவ்வான விஷயம், நாம் ரிஸ்க் எடுக்க வேண்டாமெனப் பலரும் சொன்னார்கள். ஆனால், இப்போது இதுத் தேவையானப் படம், இந்த விஷயம் மக்களைப்போய்ச் சேரவேண்டும் என்று அந்தப்படத்தை எடுத்தோம். அதற்கான வெற்றியை மக்கள் கொடுத்தார்கள். அடிப்படையில் ஒரு திரைப்படம் வெற்றியடையவேண்டியது அவசியம். நல்லப் படமாக இருந்து அது மக்களைப்போய்ச் சேரவில்லையென்றால் பயனில்லாமல் போயிடும். நான் இதுவரை கற்றுக்கொண்டதை வைத்து நல்லக் கதையாகவும் அதே நேரத்தில் வெற்றியடையுமா என்றுப் பார்த்துக் கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
 

1995 களில் நீங்கள் நடிக்கத் தொடங்கியபொது அஜித், விஜய் ரெண்டுபேருக்குமே நிறையப் படங்கள் வந்துகொண்டிருந்தது. அந்தச் சூழலில் உங்கள் படங்களுக்கு எப்படி தியேட்டர் கிடைக்கும்? உங்கள் படங்கள் வெற்றியடையும்போது அஜித், விஜய் உங்களுடன் பேசுவாங்களா?
 

நான் நடிக்க வந்தபோது ரோம்ப சின்னப் பையன். விஜய் சார், அஜித் சார் ரெண்டுபேருமே வயசுலயும், நடிப்புலயும் என்னைவிட சீனியர். இருந்தாலும் என் முதல் படத்தின் பூஜைக்கு வந்திருந்தார்கள். நான் ‘முறைமாப்பிள்ளை’படத்தில்  நடிக்கும்போது அஜித் சார் சிவசக்திப் பாண்டியன்கூட ஒரு படம் பண்ணிக்கிட்டிருந்தார். அதில் அவருக்கு நண்பனாக நடிக்கும் ரவி, என் படத்திலும் நடித்தார், அவரிடம் அஜித் “அருண் எப்படி நடிக்கிறார், நான் கேட்டேன்னு  சொல்லு”என்று விசாரிப்பார். இது போன்ற உறவுதான் எங்களுக்குள் இருந்தது. அதைத்தவிர, படம் எப்படி ரிலீஸ் ஆகுது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விஜய் சாருக்கு எஸ்.ஏ.சி சார் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அவரை வழிநடத்தினார். ஆனால், என்னை என் அப்பா, நீயாப்போய் கத்துக்கோனு விட்டுட்டாங்க. படங்களை தேர்ந்தெடுக்கிறதையும் என் போக்கில் விட்டுட்டாங்க.
 

arun


ஆரம்பகாலத்தில் நீங்களும் விஜய் சாரும் பார்க்கிறதுக்கு ஒரே மாதிரி இருக்கீங்கனு யாராவது சொல்லியிருக்காங்களா? ஏனென்றால் உங்கள் ரெண்டுபேருக்கும் ஒரெ மாதிரி ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் எல்லாம் இருந்துச்சு.
 

யாரும் சொல்லவில்லை. அது எனக்கேத் தெரிஞ்சுது. ஒருமுறை என்னோட ‘காத்திருந்த காதல்’படமும் அவரோட ஒரு படமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆச்சு. ரெண்டு படத்திலும் ஒரே ஹீரோயின் நடிச்சுருந்தாங்க. அப்போ வந்த போஸ்டரையெல்லாம் பார்க்கும்போது நானும் அவரும் ஒரே மாதிரி இருந்தோம்.
 

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி பேசியாகணும். தொடர்ச்சியாக குற்றம் 23, தடம் ஆகிய படங்களைத் தயாரித்த‘இன் சினிமா எண்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் அடுத்து எந்தமாதிரிப் படங்களைத் தயாரிக்கப் போறாங்க?
 

இந்தர் எனக்கு நல்ல நண்பர். என்னை நம்பி படம் தயாரிச்சாரு, குற்றம் 23 அவருக்கு வெற்றிப்படமாக அமைஞ்சுது. இந்தப் படமும் அவருக்கு மையில் கல்லாக இருக்கும்னு நம்புறோம். தொடர்ந்து நல்லக்கதைகள் வந்தால் அவரிடமே கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதோடு என் அப்பாவும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடப்போகிறார். அவருக்கும் ஏற்கனவே நிறைய அனுபவம் இருக்கிறது.
 

‘தடம்’நடிக்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் விக்டரும், தியாகுவும் தெரிந்தார்களா?
 

அதில் மகிழ் சார் ரொம்போ தெளிவாக இருந்தார். இதற்கு முன்னாடிப் பார்த்த அருண் விஜய்க்கும் இந்தப் படத்தில் பார்க்கிற அருண் விஜய்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்தப் படத்தில் இரட்டை வேஷத்தில் நடிக்கிறேன். ரெண்டு கேரக்டருக்கும் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் மூலமாதான் அந்த வேறுபாட்டைக் காட்டிருக்கோம். அதுதான் எங்களுக்கான சவாலாக இருந்துச்சு. அது படத்திலும் வெளிப்படும்.
 

ரொமாண்டிக் காட்சியெல்லாம் சூப்பரா வந்துருக்குனு சொல்றாங்களே?
 

மகிழ் சார் எப்பவும் நல்ல ரொமாண்டிக் ட்ராக் வைப்பாங்க. யாரும் முகம்சுளிக்காமல், ஒரு கவித்துவமான, எல்லோரும் ரசிக்கிற அளவுக்கான காதல் காட்சிகளைத் தான் அவர் வைப்பார். தடம் படத்தில் ரெண்டு அழகான ரொமாண்டிக் ட்ராக் இருக்கு. இளைஞர்கள் மட்டுமில்லாமல் குடும்பத்தோடு ரசிக்கிற மாதிரிதான் காதல் காட்சிகள் இருக்கும். 
 

படங்கள் நடிக்கிறீங்க, ஃபிட்னஸ் ஃபிரிக்ஸ் பண்றீங்க. இவையல்லாமல் அருண் விஜய் வேறென்னலாம் செய்வார்.
 

நான் நிறையப் படம் பார்ப்பேன், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு படங்களெல்லாம் பார்ப்பேன். இங்கிலீஷ்-லும் ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும். ‘டோன்ட் பிரீத்’படம் பார்த்துட்டு ரொம்போ வியந்திருக்கேன். நிறையப் படம் பார்த்து அந்தப் படம் ஏன் ஓடுது, எது மக்களுக்குப் பிடிக்குது அப்படிங்கிற விஷயங்களைக் கத்துக்கிறேன். அதுமட்டுமில்லாமல் வேற சில விஷயங்களிலும் எனக்கு ஆர்வம் இருக்கு. முக்கியமா டிராவலிங் ரொம்ப பிடிக்கும். நிறைய இடங்களுக்குப் போகனும். என்னை நானே எக்ஸ்ப்லோர் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன். அதோட என் குடும்பத்துக்கும் வேண்டியதை செய்யனும், அவங்க கூட முடிஞ்சவரைக்கும் நிறைய நேரத்தை செலவிடுவேன். 
 

‘பாண்டவர் பூமி’படம் போல ஒரு எம்மோஷனல் படத்தை திரும்பவும் அருண் விஜய்கிட்ட எதிர்ப்பார்க்கலாமா?
 

கண்டிப்பாக. திரும்ப ஒரு கிராமத்துப்படம் பண்ணணும்னு ஆசைதான். ‘தேவர்மகன்’மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான கதை அமைஞ்சா கண்டிப்பா பண்ணுவேன். அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுபோல, பாண்டவர் பூமி எனக்குப் புது அனுபவமாக இருந்துச்சு. அதில் இஞ்சினீயரா நடிக்கிறதுக்காக கட்டிடம் கட்டுகிற இடத்துக்குப்போய் அவங்க எப்படி வேலைப் பார்க்குறாங்க, எந்தமாதிரி வார்த்தைகள் பயன்படுத்துறாங்க என்பதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். நடிக்கிறவர் அந்தக் கதாப்பாத்திரத்துக்குள்ளயேப் போயிடணும்னு கத்துக்கிட்டப் படம் அதுதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்