Advertisment

காவல் உதவி ஆய்வாளர் மீது தாடி பாலாஜி புகார்!

thaadi balaji

பிரபல காமெடி நடிகராக இருக்கும் தாடி பாலாஜி, உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். மேலும் அந்தப் புகாரில், தன்னையும் மனைவியையும் திட்டமிட்டு மனோஜ்குமார் பிரிப்பதாக தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 13ம் தேதி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும் நடிகர் தாடி பாலாஜி ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணையின்போது உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் தன்னை நாக்கை துருத்தியும், விரலைக்காட்டி மிரட்டியதாகவும் அப்போதே அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரின் இச்செயலுக்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, "அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், என்னை மிரட்டுகிறார். துணை ஆணையர் விசாரணையின் போதே என்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டினார்." என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தன்னை மிரட்டுவதாகவும் துணை ஆணையர் விசாரணையின் போதே தன்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டியதாகவும் கூறினார். மேலும் அனைத்து குற்றச்சாட்டும் போதிய ஆதாரங்களையும்காவல் ஆணையரிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

actorbalaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe