/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tg-thiyagaran.jpg)
இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், ‘சத்யஜோதிபிலிம்ஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவருமானT.G.தியாகராஜன் இந்தியத் தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தொழில்துறையின் முன்னேற்றத்துக்காகப் உருவாக்கப்பட்ட அமைப்பு CII என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த ஆச்சரியமானசெய்தி திடீரென்று வந்துள்ளது,CII எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து நான்பெருமகிழ்ச்சி அடைகிறேன். தற்பொழுது பிற தொழில்துறைகளைப் போலவே திரைத்துறையும் ஒருமாபெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் இப்படியானபுதிய பொறுப்பை நான் பெற்றுள்ளதால் எனக்கு இன்னும் சவாலான பலவேறு பல பணிகள் காத்துள்ளன.அவற்றைச் செய்துமுடிக்கும் நன்னாளை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். திரைப்படத் தயாரிப்பாளராகவும், திரைத்துறையில் பல ஆண்டுகள் தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவனாகவும் எனது நீண்ட பயணம் எனக்குத் தந்துள்ள பயனுள்ள அனுபவத்தினால் எனது இப்புதிய பணியில் நான் வெற்றியை அடைவேன் என்று நம்புகிறேன். கௌரவமிக்க இப்பதவிக்கு என்னை நியமித்த CII உறுப்பினர்களுக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். 125 வருட காலப் பாரம்பரியமிக்க CII-இன் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும்.என்னால் இயன்ற வரை இப்பதவிக்கு மேலும் கௌரவத்தைச் சேர்க்க நான் முயற்சி செய்வேன்,” என்று கூறியுள்ளார்T.G.தியாகராஜன்.
T.G.தியாகராஜன் இதுவரை 5000-க்கு மேற்பட்ட சின்னத்திரை அத்தியாய தொடர்களையும், 40 திரைப்படங்களையும் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தயாரித்துள்ளார். ‘சத்யஜோதிபிலிம்ஸ்’ பட நிறுவனத்தைத் தொடங்கி ‘சத்யா மூவீஸ்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி மற்றும் சிவாஜி கணேசன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ள பல்வேறு வெற்றிப் படங்களையும் இவர் தயாரித்துள்ளார். இவரை வழிநடத்திய புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகிய இராம.வீரப்பன் இவரது மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை ‘வீனஸ்’ T. கோவிந்தராஜனும் ஹிந்தி உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததேசிய விருது வென்ற திரைப்படத் தயாரிப்பாளராவார். திரு. தியாகராஜனின் படங்கள் அவருக்கு மூன்று தேசிய விருதுகளையும், 20 மாநில விருதுகளையும் இதுவரை வென்றுள்ளன. சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகப் பட்டத்தையும், கலிஃபோர்னியாவின் சாப்மன் பல்கலைக்கழகத்தில் MBA முதுகலைப் பட்டத்தையும் இவர் படித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் கௌரவ செயலராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
மேலும், மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பின் முன்னாள் தலைவராகவும் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) போர்டு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள இவர் S.T.E.P.S. எனப்படும் தென்னிந்திய சின்னத்திரைத்தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் இருந்தார். தற்போது CII-இன் தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்குப் பணிக்குழுவின் தலைவராக இருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)