ADVERTISEMENT

இந்திய திரையரங்குகளில் நோலனின் 'டெனட்' -ரிலீஸ் தேதி அறிவிப்பு

10:15 AM Nov 23, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

கரோனா தோற்றால் பலமுறை வெளியிட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில், 'டெனட்' திரைப்படம் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, 'டெனட்' படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியா, வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை படத்தின் தயாரிப்பாளரான வார்னர் ப்ரோஸ் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 'டெனட்' திரைப்படம், டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT