Skip to main content

விமானத்தை வாங்கி கட்டிடத்தில் மோதி படமாக்கிய நோலன்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

tenet


உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டெனட்'. இந்தப் படம் கிறிஸ்டோபர் நோலன் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சயின்ஸ் பிக்‌ஷன் படம். 
 


டன்கிரிக் படத்தைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் சயின்ஸ் பிக்‌ஷன் அடிப்படையில் படம் எடுக்க இருக்கிறார் என்றவுடனேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. இதன்பின் இந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்கள், ட்ரைலர் அனைத்தும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இப்படத்தில் ஜான் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், இந்திய நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகம் முழுவதும் இருக்கும் நோலன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியுள்ளது. இந்த ட்ரைலரின் கடைசியாக விமானம் ஏர்போர்டில் மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இந்தக் காட்சி எந்த கிராபிக்ஸும் இன்றி, பழைய விமானத்தை வாங்கி, நிஜ கட்டடத்தில் மோதி படமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ: “திரில்லாக உணர்கிறேன்!" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
nolan

 

 

‘டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கியிருக்கும்  படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவும் டெனட் படத்தில் நடித்துள்ளார். கரோனா தோற்றால் பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தநிலையில், 'டெனட்' திரைப்படம் நாளை  இந்தியாவில் வெளியாகவுள்ளது. 

 

இதனையொட்டி, படத்தின் இயக்குனர்   கிறிஸ்டஃபர் நோலன், இந்திய ரசிகர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார். வார்னர் ப்ரோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றிய, கிறிஸ்டஃபர் நோலன், இந்திய ரசிகர்கள் டெனட் படத்தை பார்க்கப்போவதை நினைத்து த்ரில்லாக உணர்வதாக கூறியுள்ளார்.

 

கிறிஸ்டஃபர் நோலன், அந்த வீடியோவில், "நான் இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஹலோ சொல்ல விரும்புகிறேன். டெனட் திரைப்படத்தை, நீங்கள் பெரிய திரையில் பார்க்கபோவதை நினைத்து த்ரில்லாக உணர்கிறேன். நாங்கள் டெனட் படத்தை, மும்பை உள்ளிட்ட உலகின் பிரமிப்பான இடங்களில், பெரிய திரைவடிவமான  ஐ-மேக்ஸ் வடிவில்  எடுத்துள்ளோம். படத்தின் சிறப்பான காட்சிகளாக நான் கருதும் காட்சிகளில் சிலவற்றை மும்பையில் எடுக்க முடிந்தது. இந்தியாவில் படமெடுத்த தருணங்கள் மிகவும் அற்புதமான ஒன்றாக அமைந்தன. நீங்கள் படத்தை பெரிய திரையில் பார்க்கப்போவது எனக்கு மிகவும் முக்கியமானதாகும். உங்களுக்கு படம் மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். 

 

 

Next Story

இந்திய திரையரங்குகளில் நோலனின் 'டெனட்' -ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
tenet

 

 

'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கியிருக்கும்  படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

 

கரோனா தோற்றால் பலமுறை வெளியிட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இந்தியா  உள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியாகி இருந்தது.

 

இந்தநிலையில், 'டெனட்' திரைப்படம் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ  அறிவிப்பினை, 'டெனட்' படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியா, வீடியோ பதிவின் மூலம்  வெளியிட்டுள்ளார். அதனை படத்தின் தயாரிப்பாளரான வார்னர் ப்ரோஸ் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 'டெனட்' திரைப்படம், டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.