Advertisment

ஓ.டி.டியில்  வெளியாகும் கிறிஸ்டஃபர் நோலனின் 'டெனட்' 

nolan

Advertisment

'டன்கிரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன்இயக்கியிருக்கும்படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கரோனாதோற்றால்பலமுறைவெளியிட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்காஉள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில்டெனட்திரைப்படம் வெளியானது.500 மில்லியன்டாலர்வரை வசூலிக்கும்எனஎதிர்பார்க்கப்பட்ட இப்படம், இதுவரை 350 மில்லியன்டாலர்வரை வசூலித்துள்ளது. இதனால் படம் சரியாகஓடவில்லை எனவிமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில் இதற்குவிளக்கமளித்தகிறிஸ்டஃபர் நோலன், "கரோனாகாலத்திற்கு முன்பு உள்ள நிலையுடன் ஒப்பிட்டுடெனட்திரைப்படம் சரியாக ஓடவில்லை என்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தின் வசூல் என மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இந்த நிலையில் டெனட் திரைப்படம், வருகிற டிசம்பர் 15 ஆம் தேதிஓ.டி.டியில் வெளியாகும் என படத்தின் டெனட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் டெனட் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாததால், இங்கு ஒ.டி.டியில் வெளியாகுமா என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.

christopher nolan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe