tenet

உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டெனட்'. இந்தப் படம் கிறிஸ்டோபர் நோலன் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சயின்ஸ் பிக்‌ஷன் படம்.

Advertisment

டன்கிரிக் படத்தைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் சயின்ஸ் பிக்‌ஷன் அடிப்படையில் படம் எடுக்க இருக்கிறார் என்றவுடனேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பின் இந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்கள், ட்ரைலர் அனைத்தும் ரசிகர்களை ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

Advertisment

இப்படத்தில் ஜான் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், இந்திய நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் வெளியாக இருந்த படங்களின் ரிலீஸ் தேதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை 'டெனட்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாமல் ஜூலை 17ஆம் தேதி என்றே அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதனிடையே இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராபர்ட் பேட்டின்ஸன் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், இது டைம் ட்ராவல் படமல்ல என்று தெள்ளத்தெளிவாகத் தெரிவித்துள்ளார். 'டெனட்' படத்தின் போஸ்டர், ட்ரைலர் வெளியானபின் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இது ஒரு டைம் ட்ராவல் படம் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், ராபர்ட் பேட்டின்ஸனுடைய பேட்டி, ரசிகர்களின் கணிப்பை உடைத்திருக்கிறது.