tenet

'டன்கிரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாக முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளான டெனட் படம் தற்போது கரோனா குறைந்துள்ள 70 நாடுகளில் திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கம்போல கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தனக்கென உருவாகி வைத்திருக்கும் ஆடியன்ஸ் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நோலன் டீம் இருந்தது.

அந்த நம்பிக்கை வீண் போகாதபடி, வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது டெனட் படம். பிரிட்டன், கனடா, தென் கொரியா உள்ளிட்ட 41 நாடுகளில் வெளியாகியுள்ள ‘டெனெட்’ திரைப்படம் ஐந்து நாட்களில் 53 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாககூறப்படுகிறது. இது தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகை என வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வருகிற 3ஆம் தேதிதான் அமெரிக்காவில் ரிலீஸாக இருக்கும் இப்படம் 500 மில்லியன் டாலர் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment