Skip to main content

'ஓ மை கடவுளே' படத்தைப் பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்! 

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

oh my kadavule

 

புதுமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. இப்படத்தில் ஒரு நீண்ட் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

 

இந்தாண்டு ஃபிப் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான இப்படம், இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் அப்போதே பாராட்டினார்கள்.

 

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தற்போது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் 'ஓ மை கடவுளே' பார்த்தேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். அற்புதமான நடிப்பு, புத்திசாலித்தனமாக எழுதி இயக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் நீங்கள் ஒரு இயல்பான நடிகர் என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் ஒலித்த தென்னிந்திய பட பாடல்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே படத்தில் இடம்பெற்ற   ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடலில் இடம் பெற்ற நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூ-ட்யூபில் தற்போது வரை 158 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. 

mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில், கூடைப்பந்து விளையாட்டின் போது, மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதில் நடனமாடிய கலைஞர்கள், ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

“இனி நீங்கதான் என் அப்பா அம்மா” - எமோஷ்னலான மகேஷ் பாபு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
mahesh babu emotional speech in Guntur Kaaram  event

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது மகேஷ் பாபு, ரசிகர்கள் தான் எனக்கு இனி அப்பா அம்மா என எமோஷ்னலாக பேசியுள்ளார். 

அவர் பேசுகையில், “சங்கராந்தி விழா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். என்னை விட, என் அப்பா கிருஷ்ணாவுக்கு இது ஸ்பெஷல். என் படம் சங்கராந்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகிடும். அது இந்த வருடமும் தொடரும். ஆனால் இந்த சங்கராந்தி எனக்கு புதிது. ஏனென்றால் என் அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் எனக்கு போன் செய்து என் படத்தின் வசூல் பற்றி பேசுவார். அதை கேட்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் அந்த போனுக்காக காத்திருப்பேன். 

ஆனால் இப்போது ரசிகர்களாகிய நீங்கள்தான் எனக்கு அதை சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கதான் என் அப்பா, நீங்கதான் என் அம்மா. நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, தாயார் இந்திரா தேவி மற்றும் தந்தையார் கிருஷ்ணா ஆகியோர் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.