வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, மகன்களாக டீஜே, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Advertisment

narapa

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் என்பதால் இதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் போட்டிபோட்டார்கள். அந்த வகையில் தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் வாங்கியது. அதன் பின்னர் அந்த நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணுவும் தயாரிக்கிறார்.

Advertisment

தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. பலரும் இது சாத்தியமாகுமா என்று எதிர்பார்த்த நேரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அசுரன் படத்திற்கு தெலுங்கில் நாரப்பா என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் அசுரன் படத்தின் பிளாஷ்பேக்கில் தனுஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தங்கள் சமூகத்திற்கு நடந்த அநீதியை பொறுத்துக்கொள்ளாமல் தவறு செய்தவர்களை அரிவாளால் வெட்டிவிடுவார். இந்த கதையைதான் தெலுங்கிலும் வைப்பார்களா என்று எண்ணம் இருந்தது. இந்நிலையில் உண்மையில் நடந்த கரம்சேடு சாதி படுகொலையின் பின்னணியில்தான் நாரப்பாவின் கதையின் பிளாஷ்பேக்கில் வர இருப்பதாக தகவல் வெளியாகிறது.

Advertisment

கரம்சேடு என்னும் பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு தலித் மற்றும் கம்மா என்னும் இரு பிரிவினர்களுக்கு சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 6 தலித்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த உண்மை சம்பவத்தை தழுவிதான் நாரப்பா படம் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.