web series

Advertisment

கரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகளில் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓடிடி தளங்களின் வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்திருப்பதால், புது படங்கள் மட்டுமின்றி, பழைய படங்களையும் வெளியிட்டு வருகின்றன ஓடிடி தளங்கள். அதேபோல உலகம் முழுக்க ஒவ்வொரு ஓடிடியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா, தற்போது ஒரு புதிய வெப் சீரிஸை தயாரித்து வருகிறது. அதில் முழுக்க முழுக்க தமிழ் நடிகர்களை நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் படமாக்கப்பட்டு வரும் இந்த தொடரில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, ஜெயப்பிரகாஷ், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் பிரசன்னா நடிக்கும் ஒரு எபிசோடை ‘கே13’ படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார். இந்த வெப்சீரிஸ் இந்த ஆண்டு இறுதியில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அந்தாலஜி சீரிஸின் சிறப்பு நான்கு கதைகள், மூன்று இயக்குனர்கள், 2 கேமரா மேன்கள் என்று தெரிவித்துள்ளனர்.