/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/theatre_12.jpg)
அண்மையில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத், தெலுங்கு திரையுலகுக்கு தோல்விப் படங்கள் எவ்வளவு முக்கியமானவை என்றும் அவற்றுக்கு தரும் விமர்சனங்களால் துறை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆடியோவை வழிமொழிந்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “200 படங்கள் வந்தால் அதில் 190 படங்கள் தோல்வியடைகின்றன. இவற்றை சரியாக எடை போட முடியாத பத்திரிகையாளர்கள் அவற்றுக்கு மதிப்பீடு (rating) என்ற பெயரில் அவர்கள் போக்கில் ஒன்றைத் தருகின்றனர். உண்மையில் இந்த 190 தோல்விப் படங்களால் தான் துறை நடக்கிறது. பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை நடக்கிறது.
ஆனால் தோல்விப் படத்துக்கு வரும் கடுமையான விமர்சனங்களால் இயக்குனர்கள் அழிந்து போகின்றனர், தயாரிப்பாளர்களுக்கு அடுத்த படத்துக்கு யாரும் தேதி கொடுக்க மாட்டார்கள். எனவே இனி கடுமையான விமர்சனம் எழுதுபவர்கள் ரேட்டிங் கொடுக்கும்போது ஒரு புள்ளிகளுக்கு பதிலாக இரண்டு கொடுங்கள், இரண்டு புள்ளிகள் என்றால் மூன்று கொடுங்கள். அப்படிக் கொடுத்தால் தான் படத்தின் தொலைக்காட்சி உரிமைத்தை விற்க முடியும்.
வெற்றிப் பட இயக்குனர்,தயாரிப்பாளர்களை விட;தோல்விப் பட இயக்குனர், தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். வியாபார கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் திரைப்படங்களே இயக்கக்கூடாது. ஆனால் திரைப்படங்கள் மீது தாகம் கொண்டவர்கள் மட்டுமே தயாரிக்க முன் வருகிறார்கள். யாருமே அவரது படம் தோல்வியடைய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். ஒரு தோல்விப் படத்துக்குப் பின் 10 வருட உழைப்பு இருக்கிறது. அந்தப் படத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.
பூரி ஜகன்னாத் கூறியிருக்கும் இந்தக் கருத்துகளை நாங்கள் வழிமொழிகிறோம். எனவே மேற்சொன்ன விஷயங்களை அனைத்து பத்திரிகையாளர்களும், சேனல்களும் கருத்திக் கொண்டு, தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)