கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரையுலகைப் போன்று தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதுவரை பவன் கல்யாண் 1 கோடி, ராம்சரண் 70 லட்சம், நிதின் 20 லட்சம், ஜுனியர் என்டிஆர் 75 லட்சம், சிரஞ்சீவி 1 கோடி, பிரபாஸ் 1 கோடி எனத்தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தற்போது மகேஷ் பாபுவும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.