/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/138_26.jpg)
ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சேத்தன்யா. நடன இயக்குநரான இவர் தெலுங்கு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் கடந்த 30.04.2023 அன்று எமோஷனலாக ஒரு வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவில், "என் அம்மாவும்அப்பாவும்அக்காவும் என்னை எந்தப் பிரச்சனையையும் சந்திக்கவிடாமல் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். எனது நண்பர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பலரை தொந்தரவு செய்துள்ளேன்.அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பண விஷயங்களில் என் நல்லெண்ணத்தை நான் இழந்துவிட்டேன். கடன் வாங்குவது மட்டுமல்ல, திருப்பிச் செலுத்தும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. தற்போது​​நான் நெல்லூரில் இருக்கிறேன்.இது எனது கடைசி நாள். எனது கடன் தொடர்பான பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை" எனப் பேசிவிட்டுபின்பு தற்கொலை செய்துகொண்டார்.
இவரது இந்த விபரீத முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சேத்தன்யாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)