தெலுங்கு சின்னத்திரை நடிகை ஷ்ராவனி தற்கொலை செய்துகொண்டுள்ளசம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட பல தெலுங்கு தொடர்களில் நடித்தவர் ஷ்ரவானி. காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டியுடன் டிக் டாக் மூலமாகப் பழகி ஷ்ராவனி நட்பானார். பின் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகியுள்ளனர். சன்னி, தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறி ஷ்ராவனியின் அனுதாபத்தைப் பெற்றிருக்கிறார்.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே சன்னி, ஷ்ராவனியைத் துன்புறுத்தி வந்ததாகக் ஷ்ரவானியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இந்நிலையில்,ஷ்ராவனி செவ்வாய்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.