malvi malhotra

‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் ஹோட்டல் மாலினி என்றொரு படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் சினிமா தயாரிப்பு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பலமுறை சந்தித்துபேசியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார் நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், நேற்று இரவு 10 மணி அளவில் நடிகை மால்வி மும்பையில் உள்ள ஒரு கபேயில் இருந்து காரில் வீட்டுக்குசெல்லும்போது நான்கு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் காயமடைந்த அவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைதொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Advertisment