பழம்பெரும் தெலுங்கு திரையுலக நடிகை ஜமுனாவின் மரணம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஜமுனா 1953 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான புட்டிலுஎன்ற திரைப்படம்மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தெலுங்கில் பிரபலமாக இருந்த ராமராவ், அக்கினேனி போன்ற முன்னணிநடிகர்களுடன்ஜோடியாக இணைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தென்னிந்திய மொழிகள்மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். இவரின்அபாரநடிப்பு திறமையால் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றிருந்தார்.
திரையுலகம் மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்ட இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1989 ஆம் ஆண்டு ராஜமுந்திரி மக்களவைத்தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நாள் குறைவு காரணமாக மரணமடைந்தநடிகை ஜமுனாவின்(வயது 86) இழப்பு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.