flood

Advertisment

தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் மற்றும் இன்னும் சில மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் ரூ.5,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வியாபாரிகள், தொழிலதிபர்கள், பெரிய நிறுவனங்கள் எனப் பலரும் இதற்காக முன்வந்து உதவ வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை வைத்திருந்தார். முதல்வர் நிவாரண நிதிக்குப் பணமளிக்க அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண உதவிகளுக்காக நன்கொடை அளித்து வருகின்றனர்.

Advertisment

நடிகர் பிரபாஸ் ரூ.1.50 கோடியும், நடிகர் சிரஞ்சீவி, நடிகர் மகேஷ் பாபு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடியும், நடிகர்கள் நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தலா ரூ.50 லட்சமும், நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் முதல்வர் நிவாரண நிதிக்குப் பங்காற்றியுள்ளனர்.