Advertisment

பிரபல நடிகருக்கு கரோனா!

varun tej konidela

Advertisment

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர்வருண் தேஜ் கொனிடெலாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் மகனான வருண் தேஜ் கொனிடெலா, தெலுங்குதிரையுலகில் முன்னணி நடிகர் ஆவார்.இவர் நடிப்பில், கடைசியாக வெளியான ‘எஃப் 2’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அப்படத்தின் வெற்றியையடுத்து, அதன் அடுத்த பாகமான ‘எஃப் 3’ படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிறிய அறிகுறிகளுடன் எனக்குகரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் எனது வீட்டில் என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். விரைவில் மீண்டுவருவேன். உங்களது அன்பிற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe