கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள். அந்தளவிற்கு மிகவும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertisment

rahul

இதன்பின் பரத் அனே நேனு, கீதா கோவிந்தம், கல்கி, போன்று தெலுங்கு சினிமாவின் பிஸியான நடிகராக உருமாயிருக்கிறார். அண்மையில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான அல்லூ அர்ஜூனின் படம் அலா வைகுந்தபுரமுலோ படத்திலும் ராகுல் நடித்திருக்கிறார்.

இவர் சிறு வயதில் யாரோ ஒரு நபரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி மிகவும் மன வேதனைக்கு ஆளானதாக அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

மேலும் அந்த பதிவில், “அப்போது அந்த சம்பவம் நடந்தபோது அது வன்புணர்வு என்னும் அளவிற்கு என்னுடைய வயதில்லை. ஆனால், போக போக எனக்கு அது புரியவந்தது. அந்த சமயத்தில்தான் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னுடைய நண்பர்கள்தான் என்னை கவுன்சிலர்களிடம் அழைத்து சென்று என்னை மீட்டு கொண்டுவந்தனர். இதுபோல அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதை நமக்குள்ளேயே மறைக்காமல் வெளியே நமக்கு நம்பிக்கையானவர்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று தன்னுடைய வேதனை பதிவிட்டுள்ளார்.