Advertisment

கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்; பரிதவித்த பிரபல நடிகை

telecom company staff locked actress anna rajan inside office

Advertisment

அங்கமாலி டைரிஸ், ராண்டு, ஐயப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அன்னா ராஜனைதனியார் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய சம்பவம் கேரள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அன்னா ராஜன் தனது அம்மாவின் செல்போனுக்கு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவாவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அலுவலகத்தின் மேலாளருக்கும், நடிகை அன்னா ராஜனுக்கும் சிம் கார்டுவாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த, அலுவலக மேலாளர் நடிகை அன்னா ராஜனைஅலுவலகத்திற்குள் வைத்து பூட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்துஅலுவாபோலீசாரிடம் நடிகை அன்னாராஜன் புகாரளித்தார். அதன்பேரில் ஷோரூம் மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் ஷோரூம் மேலாளர் அன்னாராஜனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதன் பிறகு இருவரையும் சுமுகமாக பேசி அனுப்பி வைத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe