sonu sood

Advertisment

பிரபல இந்தி நடிகரான சோனு சூட், கரோனா கால ஊரடங்கின்போது வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் தாய்நாடு திரும்ப, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கியது, ஒரு கிராமத்தில் செல்ஃபோன் கோபுரம் அமைத்துக் கொடுத்தது உட்பட பல்வேறு உதவிகள் செய்துவந்தார். இதனையடுத்து பலரது பாராட்டையும் பெற்ற சோனு சூட், அனைவரது இதயங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டார் என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள்காட்டுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர், ஆந்திராவில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ்பயிற்சி நிறுவனம், சோனு சூட்டை கவுரவிக்கும் விதமாகத் தங்களது பயிற்சி மையத்தின் கலை மற்றும் மனித நேயத்துறைக்கு அவரது பெயரைச் சூட்டியது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவருக்கு கோவில் கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், சித்திப்பெட் மாவட்டத்தில் துப்பதண்டா என்கிற கிராமத்தில் இந்தச் சம்பவமானதுநடந்துள்ளது. நேற்று சோனு சூட்டின் சிலையை வடிவமைத்த சிற்பி மற்றும் அந்த ஊர் மக்கள் முன்னிலையில்இக்கோவில் திறக்கப்பட்டது.

Advertisment

இதனையடுத்து, அவரது சிலை வடிவமைத்த சிற்பி பேசும் போது, "சோனு சூட் தன்னுடைய உதவும் குணத்தால் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். ஆகையால், அவருக்குப்பரிசாக இந்தச் சிலையை வடிவமைத்தேன்" எனக் கூறினார்.

தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக 10 கோடி மதிப்புள்ள தனது சொத்தை, வங்கி ஒன்றில் சோனு சூட் அடமானம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.