Skip to main content

“திரைப்பட இறுதிக்கட்ட பணிகளை தொடங்கலாம்”- தெலங்கானா அரசு

Published on 21/05/2020 | Edited on 21/05/2020
telugu industry


கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாக கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க அரசு அனுமதியளித்து விட்டது. மேலும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கும் சில நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது இவ்விரு அரசுகளும். இதனால் தெலுங்குத் திரையுலகில் எப்போது பணிகள் தொடங்குவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சிரஞ்சீவி வீட்டில் இன்று நடைபெற்றது. இதில் முன்னணி தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, இயக்குநர்கள் ராஜமெளலி, த்ரிவிக்ரம், கொரட்டலா சிவா உள்ளிட்டோருடன் தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச யாதவும் கலந்து கொண்டார். இதில் அனைவரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இறுதியாக இறுதிக்கட்டப் பணிகளை நாளை (மே 22) முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (மே 21) மாலை வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தெலுங்குத் திரையுலகினர் ஒன்றிணைந்து எப்போது தொடங்கலாம், எப்படி தொடங்கலாம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றைக்கேட்டுள்ளது தெலங்கானா அரசு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூன்று வருடத்திற்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டதா ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி?

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

ramoji city

 

உலகிலேயே மிகப்பெரிய திரைப்பட ஸ்டூடியோவாக இருப்பது ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. தற்போது இந்த ஸ்டூடியோவை டிஸ்னி நிறுவனம் மூன்று வருடங்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து வாடகைக்கு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த படமான 'பாகுபலி' ஒன்று மற்றும் இரண்டாம் பாகம் அனைத்தும் இந்த ஸ்டூடியோவில்தான் எடுக்கப்பட்டது. அதேபோல இந்தியாவில் எடுக்கப்படம் நாற்பது சதவீத ஷூட்டிங் இங்குதான் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

 

இப்படி ஒரு முக்கியமான ஸ்டூடியோ பெரும் தொகைக்கு டிஸ்னி நிறுவனம் வாடகைக்கு எடுக்கக் காரணம் தொழில்நோக்கம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது ஓ.டி.டி. தளத்தில் நுழைந்திருக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கு இந்த ஒப்பந்தம் வலு சேர்க்கும் என்றெல்லாம் இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. 

 

உலகிலேயே மிகப்பெரிய ஃபிலிம் சிட்டியான ராமோஜிராவில்தான் பல இந்திய படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதால் கண்டிப்பாக எவ்வளவு பெரிய தொகைக்காவும் ராமோஜிராவை வாடகைக்குக் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. 

 

 

Next Story

தனியாக வசித்து வந்த நடிகை... மர்மமான முறையில் மரணம்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் தனியாக அபார்ட்மெண்டில் வசித்து வந்த நடிகை மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

  telungu


ஆந்திராவை சேர்ந்த, பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சாந்தி தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று வியாழக்கிழமை இறந்து கிடந்துள்ளார். ஹைதராபத்தில் எல்லா ரெட்டிகுடாவில் இன்ஜினியர் காலனி அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். 

அவருடைய வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு உரிய வகையில் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தவலின்படி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.