Advertisment

'கே.ஜி.எஃப்' பட மோகம் ; ஒரே மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

Teenage boy smokes like yash from KGF 2, that boy get tragedy

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2'. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'கே.ஜி.எஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் படக்குழு தொடங்கவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தை ஹைதராபாத்தில் உள்ள சிறுவன் பார்த்துள்ளான். படத்தில் இடம்பெற்றுள்ள யஷ் சிகரெட் பிடிக்கும் காட்சியால் ஈர்க்கப்பட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை தொடர்ச்சியாக ஒரே மூச்சில் புகைத்துள்ளான். இதன் விளைவாக சிறுவனுக்கு கடுமையான தொண்டைவலியும் இருமலும் ஏற்பட்டுள்ளது. பிறகு ஹைதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் குணமடைந்துள்ளான். பிறகு அச்சிறுவனுக்கு முறையாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

kgf 2 yash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe