Skip to main content

800 படத்தில் நடிக்க மறுத்த டீஜே! 

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
teejay

 

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

 

மேலும், இந்த படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றை சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

 

இந்நிலையில் பிரபல பாடகரும், நடிகருமான டீஜேவுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அதை அவர் தவிர்த்துவிட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், அவரிடம் தெரிவிக்கப்பட்ட கதையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் இடையே நடைபெற்ற போர் பேசப்பட்டிருந்தது. அது எனக்கு சரியாகப்படவில்லை. என்னுடைய அம்மா ஈழ பெண், போரின்போது அவரும் பாதிக்கப்பட்டவர். அதனால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு படத்தில் இணையும் டீஜே!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

teejay

 

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

 

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், இது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-ஆவது படம் என்றும் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் பெயர் ‘பத்து தல’ என்றும் அறிவித்திருந்தது.

 

மேலும் இப்படத்தில் ‘அசுரன்’ புகழ் டீஜே அருணாச்சலம் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டீஜே பதிவிடுகையில், “எனக்குப் பிடித்த 90-ஸ் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Next Story

“அந்த அவமானம்தான் என்னை இப்படி மாற்றியது”- கடந்த காலம் குறித்து டீஜே

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

யூ-ட்யூபில் இண்டிபெண்டன் மியூசிக்கின் மூலம் தமிழக இளைஞர்களிடம் பிரபலமடைந்தவர் டீஜே. இவர் இசையமைப்பில் உருவான முட்டு முட்டு, தேன் நிலவு பாடல்கள் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. இவர் தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடிக்கிறார். 
 

teejay

 

 

இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் அசுரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து டீஜே நம்மிடம் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் குறித்து பேசிய அதேநேரத்தில் தனது தமிழ் பற்று குறித்தும் பகிர்ந்துகொண்டார் டீஜே.
 

sss


அந்த பேட்டியில், “நான் முதலில் பேசி, எழுதிய மொழி தமிழ். நான் என்றைக்கும் என்னுடைய தாய்மொழி தமிழை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. என்னோட அம்மா அப்பா அப்படிதான் என்னை வளர்த்திருக்காங்க. என்னதான் நான் லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நான் தமிழன். எங்கள் ஊரில் ஆரம்பக்கல்வியில் முதல் மொழியாக அங்கிலம் இருக்கும், தமிழை அவ்வளவாக கண்டுக்கொள்ள மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு தமிழ் என்றாலே விடுதலை புலிகள் என்றுதான் நினைப்பார்கள். அப்படி அரசியல் ரீதியாகதான் அவர்கள் பார்ப்பார்கள். தமிழன் என்றாலே அங்கு எப்போதும் கீழ்தரமாகத்தான் பார்ப்பார்கள். நான் சின்ன வயதிலிருந்து அதையெல்லாம் தாண்டி, அவமானப்பட்டு வந்ததால், நம்முடைய தாய்மொழி தமிழை பரப்ப வேண்டும் என நினைத்து நான் இசை வடிவில்அதை தொடங்கினேன். என்னுடைய அடுத்த ஆல்பம்கூட பல மொழிகள் கொண்ட ஆல்பமாக இருக்கும். அதில் மொத்தம் 12 ட்ராக்குகள் இருக்கின்றன. தமிழ் ஸ்பானிஷ், தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகள் ஒரு பாடல் என்ற ஐடியாவில் இருக்கும். இதன்மூலமாக என்னுடைய தாய்மொழியை பரப்புவேன்.” என்று கூறினார்.