arya

இயக்குநர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, சாக்ஷி அகர்வால், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டெடி’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமான திரையரங்குகள் மூடப்பட்டன.

Advertisment

இதனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்ட நிலையில், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, ‘டெடி’ படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் மார்ச் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், ‘டெடி’ திரைப்படம் இன்று (12.03.2021) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது, திருமணத்திற்குப் பிறகு ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்த முதல் படமென்பது குறிப்பிடத்தக்கது.