Advertisment

ஆர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஓடிடியா..? திரையரங்கா..?

vdvd

‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ படங்களின் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து, காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் திருமணத்துக்குப் பிறகு நடிகர் ஆர்யா, சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இதில் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

dbvdbv

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டதால் 'டெடி' படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் மார்ச் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Actor Arya teddy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe