Advertisment

ஓ.டி.டி.-யில் ரிலீஸாகுமா ‘டெடி’?

teddy arya

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா சாயிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் 'டெடி'. இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்க ஸ்டூடியோ க்ரீன்ஸ் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்துள்ளாார்.

Advertisment

மேலும், இயக்குனர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு நடைபெற்று முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரிலீஸுக்காக தயாராக இருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி இப்படம் வெளியாகவில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டெடி' படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தயாராகி இருக்கும் படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வரும் நிலையில் 'டெடி' படக்குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தால் விரைவில் 'டெடி'யைஓ.டி.டி.-யில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Actor Arya teddy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe