
'மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ படங்களின் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. ஸ்டூடியோ கிரீன் சார்பில், கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து, காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், திருமணத்துக்குப் பிறகு நடிகர் ஆர்யா, சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், இதில் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிந்து, கடந்த மார்ச் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 'டெடி' படம் வெளியானது. இப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், 'டெடி' படத்தில் டெடி பொம்மையாக நடித்தவர் யார் என்பதை அந்தப்படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்...
"டெடியை பின்னால் இருந்து இயக்கிய அந்த கோகுல் இவர்தான். தியேட்டர் கலைஞரான இவர், டெடி பொம்மையின் உடையை அணிந்துகொண்டு பொம்மையின் உடல் பாவனைகளோடு நடித்தார். டெடியின் தலைப்பகுதி மட்டும் 3டி கிராபிக்ஸ் முறையில் நடிக்கவைக்கப்பட்டது. அதனை செய்தது என்எக்ஸ் ஜென் மீடியா எனும் கிராபிக்ஸ் நிறுவனம். அதீதஆர்வம் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)