ADVERTISEMENT

கமலுக்காக பயன்படுத்திய தொழில்நுட்பம் - ரகசியத்தை பகிர்ந்த லோகேஷ்

01:18 PM Jun 11, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் இந்தியாவை தாண்டி உலக நாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வசூலில் உலகம் முழுவதும் ரூ.270 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ், உதவி இயக்குநர்கள், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யா போன்றோருக்கு பரிசுகளை வழங்கி அன்பை பகிர்ந்தார்.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் இடம் பெறாத காட்சிகள் விரைவில் பிரத்யேகமாக வெளியிடப்படும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படத்தில் கமல்ஹாசனை இளமையாக காட்ட (De-Aging) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடிய தாமதமானதால் படத்தில் அந்த காட்சிகள் இடம்பெறவில்லை. விரைவில் அந்த காட்சிகள் பிரத்யேகமாக வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதோடு படத்தின் ஒரு மேக்கிங் வீடியோ வருகிற ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT