Advertisment

யோகி பாபுவின் ‘சட்னி - சாம்பார்’ சீரிஸின் டீசர் வெளியீடு!

Teaser release of Yogi Babu's 'Chatni - Sambar' series!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், உருவான ‘சட்னி - சாம்பார்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான ‘அமுதா கஃபே’ என்ற பாரம்பரிய ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தருகிறார்கள். அடுத்ததாக யோகி பாபு தள்ளு வண்டியில் நடத்தும் ஒரு சிறிய சாலையோர உணவகமான ‘அமுதா உணவகம்’. இங்குள்ள சட்னிக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த இரு உணவகங்களுக்கு இடையேயான போட்டியை மையப்படுத்தியே இந்த சீரிஸ் அமைந்துள்ளது.

Advertisment

ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கிறார். மேலும், இந்த சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Advertisment

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த சீரிஸிற்கு, பிச்சைக்காரன் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டேநேஷனல் தயாரிப்பில் உருவாகும், இந்த சீரிஸிற்கு, இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனங்கள் எழுதியுள்ளார். கலை இயக்கம் கே. கதிர் செய்ய, எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

actor yogi babu hotstar yogi babu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe