Advertisment

“செருப்பை வீசவும், அவமானப்படுத்தவும் உரிமையில்லை...”- ‘டீம் கங்கனா’ பதிலடி!

kangana ranaut

சுசாந்தின் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு குறித்த விவாதம் நாளுக்கு நாள் சமூக வலைதளத்தில் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிகாரம் மற்றும் பணம் மிக்கவர்களின் வாரிசுகள் வெளியிலிருந்து வரும் திறமையாளர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்துவிடுகின்றனர் என்பதே பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் பிரபல இயக்குனரான மகேஷ் பட்டின் மகள், பூஜா பட் வாரிசு அரசியல் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்கள் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிற வாரிசு அரசியல் பற்றி கருத்து சொல்லும்படி என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஒட்டுமொத்த திரைத்துறையைகாட்டிலும் ஏராளமான புதிய திறமையான நடிகர்களையும், இசையமைப்பாளர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்ணாக, என்னால் இதற்கு சிரிக்க மட்டுமே முடிகிறது. உண்மைகள் யாருக்கும் சென்றடைவதில்லை. மாறாக புனைவுகளே அதிகமாக சேர்கின்றன.

Advertisment

பட் குடும்பத்தினர் பிரபலமான நடிகர்களுக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகளும், புதியவர்களை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களோடு பணிபுரிந்ததால் ஒதுக்கப்பட்ட காலம் என்றஒன்றும் இருந்தது. இன்று அதே மக்கள் வாரிசு அரசியல் செய்கிறார்களா என கேட்கின்றனர்.கூகிள் செய்து பார்த்துவிட்டு ட்வீட் செய்யுங்கள் நண்பர்களே. யோசித்துப் பேசுங்கள் என்று கூட சொல்லப் போவதில்லை.

கங்கனாவை பொறுத்தவரை அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை, இல்லையென்றால் அவர் 'கேங்ஸ்டர்' படத்தில் அவர் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க மாட்டார். ஆம், அனுராக் பாசு தான் அவரை கண்டுபிடித்தார், ஆனால் விஷேஷ் பிலிம்ஸ் அவருக்கு உறுதுணையாக நின்று படத்துக்கு முதலீடு செய்தது. இது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய எல்லா முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கங்கனாவின் அதிகாரபூர்வக் அக்கவுண்டான ‘டீம் கங்கனா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“அன்புள்ள பூஜா,அனுராக் பாசுகங்கனாவின் திறமையைக் கண்டறிந்தார். நடிகர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை முகேஷ் பட் விரும்புவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் திறமையானவர்கள் இலவசமாககிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றன. ஆனால் அதற்காக உங்கள் தந்தை மகேஷ் பட்டுக்கு கங்கனாவின் மீது செருப்பை வீசவும், அவரை ‘பைத்தியம்’ என்று அழைக்கவும், அவரை அவமானப்படுத்தவும் உரிமையில்லை. கங்கனாவை ஒரு துயரமான முடிவு என்று அவர் அறிவித்தார். ஏன் சுஷாந்த் மற்றும் ரியா காதலில் அவர் தலையிட்டார்,இவையெல்லாம் நீங்கள் அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்” என்று பதிவிட்டுள்ளது.

Sushant Singh Rajput Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe