இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. படித்து முடித்த மாணவர்கள், படித்துகொண்டிருக்கும் மாணவர்கள் என்று அனைவருமே தங்களின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களின் நினைவுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கல்லூரிப் பேராசிரியர்கள்

எனக்கு உரமிட்டவர்கள்;

பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.

காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்

பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.

அவர்களைப் பார்த்துப்

பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;

காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.

ஆசிரியர் குலத்திற்கு

என் கனிந்த கைகூப்பு” என்று தெரிவித்துள்ளார்.