Published on 14/11/2018 | Edited on 14/11/2018

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய தமிழ் படங்கள் திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்களாக இந்த தளத்தை முடக்க முயற்சித்து வரும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் ‘டாக்ஸிவாலா’ திரைப்படத்தை எச்.டி யில் வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 17ம் தேதி வெளியாக இருந்த நிலையில் அதற்குமுன்பே இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரையும், திரைவுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'நோட்டா' திரைப்படம் தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.