Advertisment

‘டார்ஸான்’ நடிகர் ரான் எலி மறைவு

tarzan actor ron ely passed away

Advertisment

ஹாலிவுட்டில் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரான ‘டார்ஸான்’ தொடரில், கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ரான் எலி. ௬ அடிக்கு மேல் உயரமுள்ள இவர் தனது கட்டுமஸ்தான உடல் மூலமும் ரசிகர்களை கவர்ந்தார். பின்பு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். 2001ஆம் ஆண்டு நடிப்பில் இருந்து விலகினார். ஆனால் 2014ஆம் ஆண்டு ‘எக்ஸ்பெக்ட்டிங் அமிஷ்’(Expecting Amish) என்ற படத்தின் மூலம் மீண்டும் நடித்தார். இதுவே அவரது கடைசி படமாக இருந்தது.

இதனிடையே ஹெலன் ஜேனட் டிரிப்லெட் என்பவரை 1959ல் திருமணம் செய்து 1961ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்பு வலேரி லண்டீன் என்பவரை 1984ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இதில் கடைசி மகனான கேமரூன், வலேரி லண்டீனை கொலை செய்தார். இந்த வழக்கில் கேமரூனை போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த சம்பவம் ரான் எலியை பெரிதும் பாதித்தது. அதன் பிறகு ரான் எலி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ரான் எலி(86) கடந்த மாதம் 29ஆம் தேதி இறந்துள்ளதாக அவரது மகள் தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் உருக்கமுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார். ஆனால் அவர் எதன் காரணமாக ரான் எலி இறந்தார் என்பதை குறிப்பிடவில்லை.

passed away hollywood actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe