/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tapsee_5.jpg)
'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி. இந்தப் படத்தை தொடர்ந்து 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். தென்னிந்தியத்திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, அதன் பிறகு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய டாப்ஸி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு சினிமா துறையில் நடைபெற்ற அவமானங்கள் குறித்து ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "ஒரு நாயகனின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால், நான் ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முறை படத்தின் நாயகனுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என்பதால் என்னை அதை மாற்றச் சொன்னார். ஆனால், நான் மறுத்த போது வேறொரு டப்பிங் கலைஞரை வைத்துஎனக்குத் தெரியாமல் பேச வைத்தார்கள். மேலும், ஒரு படத்தில் நாயகனின் காட்சியை விட எனது அறிமுகக் காட்சி சிறப்பாக இருந்ததால் எனது காட்சியை மாற்ற வைத்தார். ஒரு நாயகனின் முந்தைய திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால், எனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
இப்படி என் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பத்தில் பலவிதமான எதிர்மறை அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் பணியாற்றுவதில் மகிழ்ச்சி தரும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பிறகு ஒரு சில நாயகர்கள், அந்த நாயகியை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டுமா என்று தயங்க ஆரம்பித்துவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)