Advertisment

திட்டிய ரசிகருக்குப் பதிலடி கொடுத்த டாப்ஸி...

tapsee

'ஆடுகளம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இந்நிலையில், நடிகை டாப்ஸியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பயனர் ஒருவர் அவரை ‘தகுதியற்ற நடிகை’ என்று திட்டி அவருக்கு டெக்ஸ்ட் செய்துள்ளார். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள டாப்ஸி அவருக்குப் பதிலடியை கொடுத்துள்ளார்.

Advertisment

இரண்டு ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்துள்ள டாப்ஸி, அவற்றில் "நான் எதை உயர்த்த வேண்டும்? நான் உயர்த்த வேண்டிய ஒரே விஷயம் உங்கள் கண்களுக்குத் தெரியாத தரத்தை மட்டுமே"என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தனது மற்றொரு ஸ்க்ரீன்ஷாட்டில் "நீங்கள் மிகவும் பிடிவாதமானவர் என்று நினைக்கிறேன். இதை மீண்டும் ஒரு நான்கைந்து முறை எழுதுங்கள். அப்போதாவது எனக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்"என்று கூறியுள்ளார்.

tapsee pannu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe