Tapsee announced the next film under his 'Outsiders Films' production

2010-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் டாப்சி. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வரும் டாப்சி, கடந்த ஆண்டு 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இந்த நிறுவனம் மூலம் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக 'ப்ளர்' படத்தை தயாரித்து நடித்தும் வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கான அறிவிப்பை டாப்சி தெரிவித்துள்ளார். 'தக் தக்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'வயாகாம்18' ஸ்டுடியோஸ் மற்றும் 'பிஎல்எம்' பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களோடு இணைந்து டாப்சி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் குறித்தான போஸ்டர் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் டாப்சி பகிர்ந்துள்ளார்.

Advertisment