தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக நடித்ததன் மூலம் டாப்ஸி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் அமைந்த படங்கள் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

tapsee

Advertisment

Advertisment

இதனால் பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். பிங்க் படத்தின் மூலம் சிறந்த நடிகை என்ற அந்தஸ்திற்கு வந்தார் டாப்ஸி. இதன்பின் அவர் நடிக்கும் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. டாப்ஸியும் கவர்ச்சி காட்டும் நடிகைகள் லிஸ்ட்டில் இருந்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார்.

பல வருடங்கள் கழித்து அவர் தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்தார். இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="221d0976-750d-4e36-8010-1e4879e63c89" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper_7.png" />

இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து டாப்ஸி கூறியது: “நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். நான் பிரபலமாக இருப்பது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து சென்று இருக்கிறேன்.

ஷாப்பிங் மால்களுக்கு சேர்ந்து செல்வோம். ஓட்டல்களை தேடி சென்று சாப்பிடுவோம். ஆனால் இப்போது அப்படி போக முடியவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்கள். சில நேரம் அந்த அன்பு எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எனது உடைகளை கூட வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன்” என்றார்.