tapsee

பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் மீது, சில தினங்களுக்கு முன்பு இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், அவருக்கு ஆதரவு அளித்துள்ளார். அனுராக் காஷ்யப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இயக்குனர் அனுராக் படத்தில் நடித்த பிரபல நடிகையான டாப்ஸி, அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், அனுராக் ஒரு மிகப்பெரிய பெண்ணியவாதி என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அனுராக் குறித்து அவர் அளித்த பேட்டியில், “அனுராக் காஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளும் முதல் நபராக நான்தான் இருப்பேன். ஆனால் ஒருவரை ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவது நியாயம் அல்ல.

Advertisment

Ad

இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தால் #MeToo பிரச்சாரத்தின் புனிதத்தை எவ்வாறு நிலைநிறுத்த முடியும்? அனுராக் பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவர் யாரையும் இடையூறு செய்வதில்லை. பெண்களை சரிசமமாக நடத்துபவர்'' என்றார்.