Advertisment

வெப் சீரிஸ் - ஜெய்க்கு ஜோடியாகும் ஹிட் பட ஹீரோயின்

tanya hope is heroine of jai arunkamaraja web series

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஜெய், கடைசியாக சுந்தர்.சி இயக்கிய'காஃபி வித் காதல்' படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனைத் தொடர்ந்துதற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இதனிடையே வெப் சீரிஸ் ஒன்றில் ஜெய் நடித்து வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸை பிரபல ஓடிடி நிறுவனம் தயாரிப்பதாகவும்.,உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குவதாகவும் தகவல் வெளியானது. மேலும் சாம் சி.எஸ் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இந்த சீரிஸில் நடிகை தன்யா ஹோப் இணைந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தன்யா ஹோப், தமிழில் அருண் விஜய்யின் 'தடம்' படம் மூலம் அறிமுகமாகி அடுத்ததாக ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'தாராள பிரபு' படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சீரிஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tanya hope arunrajakamaraj jai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe