Skip to main content

“ரோஹித் சர்மா பயோபிக்கில் விஜய் சேதுபதி” - தமன்னா விருப்பம்

 

tammanna choice of cricketers biopic

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

 

இதனிடையே நேற்று நடந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கான போட்டியின் இடைவெளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமன்னாவிடம் வீரர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் பயோபிக்கில் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்குப் பதிலளித்த தமன்னா, ரோஹித் சர்மாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதியும், ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் தனுஷும், ஜடேஜாவின் பயோபிக்கில் அல்லு அர்ஜுனும், விராத் கோலி பயோபிக்கில் ராம் சரணும் நடித்தால் நன்றாக இருக்கும்" என அவரது விருப்பத்தைப் பதிலாக அளித்தார். 

 

முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் ராம் சரண், விராத் கோலி பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அதுபோன்ற ஐடியா இப்போதைக்கு இல்லை என அவர் கூறியதாக அண்மையில் தகவல் வெளியானது.