shiva

Advertisment

2010ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் ஸ்பூப் படமாக வெளியான 'தமிழ்ப்படம்' மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 'தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்ற நிலையில் படத்தின் டீசரை மே 25ஆம் தேதி வெளியிடுவதாக முன்னர் அறிவித்த படக்குழு, பின்னர் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படக்குழு 'நையாண்டி' அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் 'தமிழ்படம் 2.0' படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. சிவா, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.