tamizhpadam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'தமிழ்படம் 2' படத்தின் 'நான் யாருமில்ல' என்ற சிங்கள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவாவே மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து உருவாகிக்கொண்டிருக்கும் இதில் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் 'தமிழ்ப்படம் 2' படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் படத்தில் இடம்பெறும் பாடல் லிஸ்ட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதைதொடர்ந்து படம் ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">