தமிழ் சினிமாவின் முதல் 'ஸ்பூப்' படமான 'தமிழ்ப்படம்' மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகம் 'தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.