விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் தமிழன். ப்ரியங்கா சோப்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, ரேவதி, நாசர் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் மஜித்.
கரோனா வைரஸ் அச்சுறுத்துல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் மஜித் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கான மருத்துவச் செலவுகளுக்குப் போதிய பணமின்றி தவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் ராஜேஷ் இயக்குனர் மஜித்துக்கு உதவி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் இருந்து குணமாகி, டிஸ்சார்ஜ் ஆகியுள்ள மஜித், தயாரிப்பாளர் ராஜேஷுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.