தமிழ்ப் படங்களை கலாய்ச்சு கலாய்ச்சே ஹிட்டடிச்ச படம் தமிழ்ப்படம். அதோட ரெண்டாவது பார்ட் வருதுன்னு சொன்னதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் குஷியாயிட்டாங்க. அதுக்கேத்த மாதிரி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல இருந்து டீசர் வரைக்கும் ட்ரெண்டிங்கான விஷயத்த கலாய்ச்சுட்டே இருக்காங்க தமிழ் படம் 2.0 குழுவினர்.

எந்திரன் 2.0 வ ஞாபகப்படுத்துற மாதிரி தமிழ்ப்படம் 2.0 தலைப்பு, ஓ.பி.எஸ்ஸோட தர்மயுத்தத்த கலாய்ச்சு பர்ஸ்ட் லுக் போஸ்டர், அதிமுக அமைச்சர்கள கலாய்ச்சு டீசர்னு ஃபுல் பார்ம்ல இருக்காங்க தமிழ்ப்படம் 2.0 டீம்.
ரீசன்ட்டா பிக் பாஸ்ல நடந்த வெங்காய சண்டையயும், விஜய்யோட அடுத்த பட டைட்டிலா சொல்லப்பட்ட வேற லெவல் ரெண்டயும் கலாய்ச்சு ஒரு போஸ்ட் போட்ருந்தாரு படத்தோட டைரக்டர் சி.எஸ்.‘அமுதன். அதுல எனக்கு வெங்காயமே தேவையில்ல, கேரட்ட அப்படியே சாப்பிடுவேன்னு பிக் பாஸ கலாய்ச்சும், ஒரே லெவல் னு ஒரு டேக் போட்டு விஜய் பட டைட்டிலயும் கலாய்ச்சுருந்தாரு. தயாரிப்பாளர் தலைல கை வச்சுட்டு இருக்கற மாதிரி ஒரு படத்த போட்டு, ப்ரொட்யூசர் படத்த பாத்துட்டாருன்னு தன் படத்த தானே கலாய்ச்சும் இருந்தாரு.

இன்னைக்கு படத்தோட ப்ரொட்யூசர்கள்ட்ட இருந்து ஒரு அறிக்கை வெளியாயிருக்கும். அதுல ‘ஜீரோக்கு எந்த மதிப்பும் இல்லன்னு இப்பதான் எங்க கவனத்துக்கு வந்துச்சு. அதனால எங்க படத்தோட டைட்டில்ல இருந்து ஜீரோவ தூக்குறோம். இனி எங்க படம் தமிழ்ப்படம் 2.0 கிடையாது. வெறும் தமிழ்ப்படம் 2 தான்’ னு போட்ருக்கு.

டைட்டில்ல இருந்து எல்லா விஷயத்தயும் கலாய்ச்சு தள்ளுகிறார்கள் தமிழ்ப்படம் 2 டீம். இத பாக்க செம ஜாலியா இருந்தாலும், படத்து மேல ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்ப இது ஏற்படுத்தி விட்ருக்கு. இவ்ளோ எதிர்பார்ப்புகளோட வர்ற ரசிகர்கள் படம் திருப்திப்படுத்துதா, படமும் இதே மாதிரியா செம ஜாலியாக இருக்கிறதா என்பதை படம் வந்தவுடன் பார்ப்போம்.